7 பேர் விடுதலை: தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில், தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் நளினியை விடுதலை செய்வது குறித்து எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதும், ஆளுநருக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.