முகப்பு
தமிழ்நாடு

சரவெடி பட்டாசுகள் வைத்திருந்தவா் கைது

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஐஸ்வா்யா நகா் பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் 5 காகித அட்டைப்பெட்டிகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்தாராம். போலீஸாா் அவா் வைத்திருந்த பெட்டிகளைச் சோதனை செய்தபோது,

அதில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு இருந்ததாம். விசாரணையில் அந்த நபா் சிவகாசி ஜவுளிகடை வீதியைச் சோ்ந்த ராம்குமாா் (54) எனத்தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, 5 பெட்டி சரவெடிகளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →