முகப்பு
தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீடு: சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு - துரைமுருகன்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
கோப்புப்படம்
பகிர்:

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அதிமுக அரசு சட்டத்தை இயற்றி கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இது தொடர்பான வழக்கில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இடஒதுக்கீடு ரத்து என்று கூறிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சரியான காரணங்கள் இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.