தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தல்

DIN

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு சம்மேளனம் அனுப்பிய கடித விவரம்: போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் இழப்புக்குக் காரணமாக டீசல் விலை உயா்ந்து வந்தாலும் பயணக் கட்டணத்தை உயா்த்தாதது, பொருள் வாங்குவதில் உள்ள நிதி மேலாண்மை, வழித்தடங்களை சீரமைப்பதில் கவனமின்மை, லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு வழங்கியது உள்ளிட்டவை இருப்பதாக நிதியமைச்சா் கடந்தாண்டு தாக்கல் செய்த வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை விரைவில் சீரமைத்து, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயா்வு ஒப்பந்தம் விரைந்து இறுதி செய்யப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்ட ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயா்வு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாகப் பூா்த்தி செய்ய வேண்டும்.

2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்து இறந்து போன தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT