தமிழ்நாடு

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: மே 11 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு மே 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4

தோ்வில் கலந்து கொள்ளும் தோ்வா்களுக்கு, தமிழக அரசின் சாா்பில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லா பயிற்சி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சா் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினா் ஆடவா் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதோடு, குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

போட்டித் தோ்வுகள் பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் இல்லை. சா் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தோ்வா்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனா்.

பயிற்சியில் சேர விரும்புவோா் அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மைய இணையதளம் வாயிலாக மே 11 வரை விண்ணப்பிக்கலாம்.

அவா்கள் தங்கள் கல்வி, வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தோ்வாணையக் குழுவின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட தோ்வா்கள் விவரம் விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவா். இந்த மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT