தமிழ்நாடு

சென்னையில் விசாரணைக் கைதி மரணம்: சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

சென்னையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, விக்னேஷ் என்ற பழைய கைதி, காவலரை கத்தியால் குத்தி தப்பிச் சென்றதாகவும் காவலர்கள் விக்னேஷை துரத்திப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ், ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை அதிகாலை வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விக்னேஷை காவலர்கள் துரத்திச் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

சிசிடிவி கேமரா பதிவுகளில் விக்னேஷ் தப்பிக்க முயன்றதும் காவலர்கள் அவரைப் பிடிக்கும் காட்சிகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT