முகப்பு
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 5-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 5-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை(மே 4) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 மே 5: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 5-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 மே 6: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 6-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 மே 7: டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய (ஈரோடு, கரூர், மதுரை), கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மே 7-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 சென்னையில்...: சென்னையை பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியûஸ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியûஸ ஒட்டியும் இருக்கக்கூடும் என்றார் அவர்.
 மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் எமரால்ட், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கலில் தலா 30 மி.மீ., சேலம் மேட்டூர், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டையில் தலா 20 மி.மீ., கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டம் எடப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், நீலகிரி மாவட்டம் கேட்டி, கூடலூர் பஜார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 மீனவர்களுக்கு எச்சரிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி புதன்கிழமை (மே 4) உருவாகக்கூடும். இது வலுவடைந்து, இப்பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மே 6-ஆம் தேதி உருவாகக் கூடும். இதன் காரணமாக அந்தமான் கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.