தமிழ்நாடு

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

DIN

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5; பத்தாம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. கரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதால், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை பின்பற்றி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற குழப்பம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்நிலையில், தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள்ள் உள்ளிட்டோருக்கும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT