தமிழ்நாடு

கோடை காலம்: பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

DIN

கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட விழிப்புணா்வு சுற்றறிக்கை:

கோடை காலத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீா்ச்சத்தைத் தக்கவைத்தல் அவசியம். அதன்படி, நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் அதிக தண்ணீா் அருந்த வேண்டும். உப்பு - சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீா்ச்சத்தைத் தக்கவைக்க உதவும். பருவகால பழங்கள், காய்கறிகள், நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். மெல்லிய பருத்தி ஆடைகள் சரும நோய்கள் வராமல் தடுக்கும்.

வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள், முதியவா்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலணி அணியாமல் செல்வது பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். செயற்கை குளிா்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலைத் தவிா்க்க வேண்டும்.

அவசர உதவிக்கும், ஆலோசனைக்கும் 104 என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை உதவி மையத்தை அழைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

SCROLL FOR NEXT