முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.80 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 3111கன அடியிலிருந்து 5310 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 5,310 கன அடியாக அதிகரிப்பு.
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 3,111கன அடியிலிருந்து 5,310 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

நீர்வரத்து அதிகரித்ததால், இன்று புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.58 அடியிலிருந்து 105.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 72.56 டிஎம்சியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 1,850 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 3,111 கன அடியாகவும், இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 5,310 கன அடியாகவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →