தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஒழுங்கீனத்தில் ஈடுபடாத மாணவர்கள்

DIN

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று நடைபெற்றது.

இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையும், அரசுத் தேர்வுகள் இயக்ககமும் மேற்கொண்டிருந்தன.

மொழிப்பாடத் தேர்வு இன்று காலை நடந்து முடிந்த நிலையில், மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப் பாடத் தேர்வன்று ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டத் தேர்வர்கள் எவரும் இல்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தோ்வுகள் நடைபெற்றன. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முன்னதாக, பொதுத் தோ்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுதத் தடை விதிக்கப்படும். தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 28 வரை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT