அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதீனங்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினுடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், கோவை பேரூராதீனம் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினோம். பட்டணப் பிரவேசத்தை சுமுகமாக நடத்த அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம்.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.