சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடையில்லை: உச்ச நீதிமன்றம்
சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்துமாறு உத்தரவிடப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
புது தில்லி: சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்துமாறு உத்தரவிடப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உங்களுக்குத் தேவையான நேரம் அளிக்கப்பட்டிருந்தது. எங்களது உத்தரவு நீர்த்துப்போவதை விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் இன்னும் எங்கள் உத்தரவு நிறைவேற்றப்படாமல் உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு நீர்த்துப்போவதை அனுமதிக்க முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள், இடத்தைக் காலி செய்ய போதுமான நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்று இடத்துக்கான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த விவகாரத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள்.
முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதிலிருந்து, இந்த விவகாரத்தில் முதல்வர் கவனத்துடன் இருப்பது தெரிய வருகிறது. பாதிக்கப்படுவோருக்கு மாற்று வீடு வழங்கும் வேலையை அரசு செய்யட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.