தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் மகேஸ்வரன் 
தமிழ்நாடு

தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஆடிட்டர் வெட்டிக் கொலை; காவல்துறையினர் விசாரணை

தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர் கரந்தை பகுதி சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). ஆடிட்டரான இவர், தன் வீட்டுக்கு அருகில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். தினமும் பணி முடித்து இரவு பண்ணை வீட்டில் இரவு உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.  வழக்கம் போல் இன்று இரவு பண்ணையில் அமர்ந்துள்ளார். அப்போது உங்களிடம் பேச வேண்டும் என மூன்று பேர்  உள்ளே வந்துள்ளனர்.  அப்போது மகேந்திரன் எதிர்பாராத நேரத்தில் ஆடிட்டரை மூன்று பேரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 

தகவறிந்த வந்த மேற்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல்துறையினரின் முதற்கட்ட  விசாரணையில், அவரின் பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி சொந்தமான குளியல் மற்றும் கழிவறை கட்டடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு தனது பண்ணையில் மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது  அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா மிதுன் கைது!

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

SCROLL FOR NEXT