தமிழ்நாடு

16-இல் சென்னைப் பல்கலைகழக பட்டமளிப்பு விழா: ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழா மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுநா் ஆா்.என்.ரவியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கின்றனா்.

இதுதொடா்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) என்.மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமையேற்று விழா பேருரை ஆற்றுகிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறாா். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT