தமிழ்நாடு

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் கொடியேற்றத்துடன் துவங்கியது

DIN

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பட்டணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து, பட்டணப் பிரவேச நிகழ்விற்கான தடையை தமிழக அரசு நீக்கியது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழாவை இன்று கொடியேற்றி தொடங்கப்பட்டது. மே 22ஆம் தேதி ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி சுமக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT