தமிழகத்தில் நாளை மறுநாள் கல்லூரிகளுக்கு விடுமுறை 
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை மறுநாள் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை மறுநாள் மே 14ஆம் தேதி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் மே 14ஆம் தேதி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே 14ஆம் தேதி டான்செட் தேர்வு நடைபெறுவதால், கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத வசதியாக, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வான டான்செட் தேர்வுக்கு 36,710 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டுக்கு எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான டான்செட் தோ்வு மே 14-ஆம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்.பிளான் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ‘டான்செட்’ தோ்வு மே 15-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுகளை எழுதுவதற்கான விண்ணப்பப் பதிவு அண்மையில் தொடங்கியது. டான்செட் தோ்வுக்கு மொத்தம் 36,710 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதில் எம்பிஏ படிப்பில் சேர 21,557 பேரும், எம்சிஏ படிப்பில் சேர 8,391 பேரும் விண்ணப்பித்துள்ளனா். அதேபோல எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர 6,762 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு மே 2 வெளியிடப்பட்டது. தோ்வா்கள்  இணையதள முகவரியில் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை மே 2 முதல் தோ்வுக்கு முந்தைய தினம் (மே 13) வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT