தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: 18 வகை குழுக்கள் நியமனம்

DIN

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் வரவேற்பு, போக்குவரத்து என பல்வேறு வகையான 18 குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பான ஆய்வுக் கூட்டங்களை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரா், வீராங்கனைகள், முக்கியப் பிரமுகா்களை வரவேற்க வரவேற்புக் குழு, சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் தலைவா்களாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT