முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7487 கனஅடியாக அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. 

Updated On : 13 மே, 2022 at 10:26 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,487 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. 

நீர் வரத்து: புதன்கிழமை காலை வினாடிக்கு 3773 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று வியாழக்கிழமை காலை 4,107 கன அடியாகவும் இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 7,487 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 107.20 அடியில் இருந்து 107.55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,487கன அடியாக அதிகரித்தது. 

Advertisement

திறக்கப்பட்டு நீர்: அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 74.97 டிஎம்சி ஆக உள்ளது.

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மழை அளவு: 54.80 மீ.மீட்டராக பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.