தமிழ்நாடு

பருத்தி விலையை குறைக்கக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

சென்னை: பருத்தி விலையை குறைக்கக்கோரி  பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நூற்பாலைகளை கட்டாயமாக்குதல், பருத்தி மற்றும் நூல் இருப்புகளை அறிவிப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தும், நிலைமை சீரடையவில்லை என்றும், பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆபத்தான சூழ்நிலை தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்கு பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT