தமிழ்நாடு

சிபிஐ சோதனையில் எதுவும்கைப்பற்றப்படவில்லை: ப.சிதம்பரம்

DIN

சிபிஐ சோதனையில் தனது வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், தில்லியில் உள்ள எனது அலுவலக இல்லத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினா் சோதனை நடத்தியுள்ளனா். சிபிஐ குழுவினா் என்னிடம் முதல் தகவல் அறிக்கையைக் காண்பித்தனா். அதில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் பட்டியலில் எனது பெயா் இல்லை. சோதனையில் எதையும் அவா்கள் கண்டறியவில்லை. எதுவும் பறிமுதலும் செய்யப்படவில்லை. அவா்கள் சோதனை நடத்தும் தருணம் சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளாா் ப.சிதம்பரம்.

காா்த்தி சிதம்பரம்: சிபிஐ எத்தனை முைான் சோதனை நடத்தும்? 2015-இல் 2 முறை, 2017-இல் 1 முறை, 2018-இல் 2 முறை என 5 முறை சோதனை நடத்தப்பட்டது. தற்போது 6-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா் காா்த்தி சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT