தமிழ்நாடு

'அபத்தமான குற்றச்சாட்டு'- ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் கண்டனம்

DIN

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதுகுறித்து ட்விட்டரில், 'ப.சிதம்பரம் ஒரு தேசியவாதி மற்றும் ஒரு தேசபக்தர். நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு இடமில்லாதது. தன்னை இழிவுபடுத்த சிபிஐ கதை கட்டுகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக சிபிஐ மூலம் ஆதார அடிப்படையிலான அபத்தமான குற்றச்சாட்டுகளை விதைப்பது, தேர்ந்த அரசியல்வாதிகளின் நடத்தையில் உள்ள வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான தில்லி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை இன்று நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT