தமிழ்நாடு

நூல் விலை உயர்வு: தமிழக எம்.பி.க்கள் நாளை(மே 18) மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு

DIN

நூல் விலை உயர்வை தடுக்கக் கோரி தமிழக எம்.பி.க்கள் குழு புதன்கிழமை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.

நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள பின்னலாடை தொழில்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களின் எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நாளை தில்லி செல்லவுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து நெசவாளர்கள் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT