தமிழ்நாடு

‘மாணவர்கள் அத்துமீறினால் கைது’: காவல் ஆணையர் எச்சரிக்கை

DIN

மாணவர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காலை கல்லூரி நுழைவுவாயில் அருகே ‘ரூட் தல’ பிரச்னை காரணமாக ஒருவரையொருவர் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

மற்றொரு சம்பவத்தில், சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநரை மாணவர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

மாணவர்கள் நடவடிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வகையில் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பேருந்து ஓட்டுநரை தாக்குவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுவரை மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என மென்மையாக கையாண்டோம். இனிமேல், இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT