தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை ஏன்? சிபிஐ விளக்கம்

DIN

மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக சிபிஐ விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப. சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், சோதனை குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு ஒரே மாதத்தில் விசா வழங்க சென்னையை சேர்ந்த நபருக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை, மும்பை மற்றும் பஞ்சாபை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று காலைமுதல் சென்னை, மும்பை, கர்நாடகம், ஒடிசா, பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த புகார் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT