அற்புதம்மாளிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

அற்புதம்மாளிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

DIN

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது குடும்பத்தாருடன் விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பின் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில். “30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது பதிவில், “சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

18 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் இதுவரை திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை வகையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT