கோப்புப்படம் 
தமிழ்நாடு

‘வென்றது நீதி’: பேரறிவாளன் விடுதலைக்கு கமல்ஹாசன் வாழ்த்து

வென்றது நீதியும் அற்புதம் அம்மாளின் போர்க்குணமும் என பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

வென்றது நீதியும் அற்புதம் அம்மாளின் போர்க்குணமும் என பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு நடிகரும், மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT