தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் எம்.பி. ரவீந்திரநாத் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
தேனி மக்களவைத் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார்.
முன்னதாக முதல்வருக்கு ' பாரதியார் கவிதைகள்' புத்தகத்தை பரிசாக அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.