துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடியோ
துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி: துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவர், பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து பயனாளிகளிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெறும் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் பயனாளியிடம் நான் இடத்தை பார்வையிட வரும்பொழுது மீதி பணத்தை தர வேண்டும் என்று கறாராக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
Advertisement
இந்த விடியோ காட்சிகளை கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.