பாலாற்றில்  நீர்வரத்து அதிகரித்ததால் சுமார் 20 அடி அகலத்திற்கு தற்போது அடித்து செல்லப்பட்டுள்ள தரைப்பாலம். 
தமிழ்நாடு

பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்: 50க்கும் மேற்பட்ட கிராம பள்ளி மாணவர்கள் பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

DIN


திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கக் கூடிய தரைப்பாலம் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஆம்பூரில் இருந்து குடியாத்தம் உள்ளிட்ட கிராங்களை இணைக்கக் கூடிய மாதனூர் தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த தரைப்பாலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் மற்றும் மண் போன்ற பொருள்களைக் கொண்டு தற்காலிக சாலையாக அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்நிலையில், கடந்த 1 வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பாலாற்றில்  நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது தரைப்பாலம் சுமார் 20 அடி அகலத்திற்கு பாலாற்றில்  அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூரில் இருந்து குடியாத்தம் மற்றும் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் செல்லக்கூடிய மிகமுக்கியமான சாலை என்பதால் பள்ளி மாணவர்கள் பணிக்கு செல்பவர்கள் என ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

SCROLL FOR NEXT