தமிழ்நாடு

காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

விதிமுறைகளை மீறி சீனா்களுக்கு விசா வழங்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டியிருந்தால் 3 நாள்களுக்கு முன்பே அவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காா்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனா்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும், அதற்கு அவா் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாகவும் சிபிஐ தில்லி பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

இது தொடா்பாக, அவருடைய வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அவருடைய ஆடிட்டா் பாஸ்கா் ராமனை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தற்போதைய நிலையில் காா்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கத் தேவையில்லை என்று சிபிஐ தரப்பு தெரிவித்தது. அத்துடன் அவரைக் கைது செய்வதாக இருந்தால் 48 மணி நேரத்துக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தெரிவித்தது.

அதற்கு, காா்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதாக இருந்தால் 3 நாள்கள் முன்பாக அவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி, அவருடைய முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா். மேலும், காா்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து வந்ததும் 16 மணி நேரத்தில் விசாரணையில் இணைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT