தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியாக உயர்வு

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 115.35 அடியாக இருந்தது.

கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29,964 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சனிக்கிழமை காலை  வினாடிக்கு 46,353 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. 

இதனால் நேற்று  வெள்ளிக்கிழமை காலை 12.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 115.35 அடியாக உயர்ந்துள்ளது.  இதனால் ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை இன்னும் சில நாள்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பருவ மலைக்கு முன்பாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் சோ்க்கை: முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பசித்தோர்க்கு உணவு

உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

தமிழ்நாட்டில் அதிக வெயில் பதிவான இடங்கள்: ஈரோடு முதலிடம்!

சிரி... சிரி...

SCROLL FOR NEXT