மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சுகாதாரத் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

DIN

சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுகாதாரத்துறையில் 5,971 பேருக்கு ரூ.32 கோடி செலவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. 
 
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் 2,448 ஒப்பந்த பணியாளர்கள் சம்பளம் மாதம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்படும். 

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 4,848 பணியாளர்கள் சம்பளம் மாதம் 14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையுடன் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்!

கணவரின் அன்பால் மீண்டு வந்தேன்: ஸ்ருதிகா பகிர்ந்த விடியோ!

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

SCROLL FOR NEXT