தமிழ்நாடு

சென்னை - தில்லி இடையே 4 விமானங்கள் ரத்து

DIN

சென்னை - தில்லி இடையே இன்று நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தொடர்ந்து, தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை வேகத்துடன் பலத்த காற்று வீசி வருகிறது.

மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை முதலே தில்லிக்கு செல்லவிருந்த விமானங்கள் வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. தில்லியிலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும் சிக்கல் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், சென்னை - தில்லி இடையே 4 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து இன்று மாலை 3.10, 5.15க்கு புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தில்லியிருந்து மாலை 4, நள்ளிரவு 12.15க்கு வரவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், தில்லியிலிருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையிலிருந்து தில்லி செல்லும் 6 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT