தமிழ்நாடு

பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு தமிழக அரசை குறைக்க சொல்வதா? மா.சுப்பிரமணியன்

DIN

தூத்துக்குடி: பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு தமிழக அரசை குறைக்க சொல்வதா? என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓமிக்ரான் தொற்று செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே ஒருவருக்கு கண்டறியபட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கரோனாவுக்கு உயிரிழப்பு எதுவுமில்லை. 
மக்கள் நல்வாழ்வுத்துறை நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

செவிலியர்கள் 4448 பேரும், சுகாதார பணியாளர்கள் 2448 பேரும், என மொத்தம் 7296 பேர் நியமிக்கபட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த ஊதியத்தை விட செவிலியர்களுக்கு 4000 ரூபாயும், சுகாதார பணியாளர்களுக்கு 3000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். பேட்டியின்போது,  72 மணி நேரத்தில் தேர்தல்  வாக்குறுதியை (பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்தது) நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா?  என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. 

இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT