தமிழ்நாடு

தேசிய விளையாட்டு போட்டி: 3 பரிசுகள் பெற்று கம்பம் காவலர்  சாதனை 

DIN


கம்பம்: தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர் பி.மாரியப்பன்,  3 பரிசுகளை வென்று  சாதனை படைத்தார்.

மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேசன் சார்பில் ஆண்டுதோறும் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கேரள அரசின் மாஸ்டர் அசோசியேசன் ஸ்போர்ட்ஸ் ஆப் கேரளா நடத்தியது.

இதில்  மாஸ்டர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு ( எம்.ஏ. எஸ் டி)  சார்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பி.மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கத்தையும்,  சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.

தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட 12 காவலர்கள் மத்தியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பி.மாரியப்பன் மட்டும் மூன்று பரிசுகள் பெற்றிருந்தார். 

தேசிய அளவில்  சாதனை படைத்த காவலர் பி. மாரியப்பனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்,  சக காவலர்களும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT