சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காந்தி சிலை பின்புறம் சுந்தரபுரம் தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் கலச நீர் வைத்து யாகம் நடத்தப்பட்டது.
பூர்ணாஹூதி முடிந்து மகா தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தி அதன் பின்னர் விநாயகர் வெள்ளிக்கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுந்தர விநாயகரை தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.