முகப்பு
தமிழ்நாடு

இராமநாதபுரம் இளைய மன்னர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா என். குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

இராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா என். குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்த என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா திரு.நாகேந்திர குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்விநிறுவனப் பொறுப்புகளில் சிறப்பாகச் சேவையாற்றி வந்த அவரது இந்த திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

என். குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.