முகப்பு
தமிழ்நாடு

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் புறக்கணிப்பை கண்டித்து மன்னார்குடியில் திக ஆர்ப்பாட்டம்

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் புறக்கணிப்பை கண்டித்து மன்னார்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திராவிடர் கழகத்தினர்
பகிர்:

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் புறக்கணிப்பை கண்டித்து மன்னார்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என அறிவிப்பால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் சதியை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜவீதி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பா.கவி பாரதி தலைமை வகித்தார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் க.ராஜேஸ் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலர் க.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.ஐயப்பன், மாவட்ட மாணவர் கழக செயலர் செ.அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தை விளக்கி, திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செயலர் ஜி.கணேசன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் சி.ரமேஷ், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டச் செயலர் த.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.