தமிழ்நாடு

இரட்டைக் கொலை: 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை வாட்ஸ்ஆபில் கண்டுபிடித்த போலீஸ்

DIN

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் மனைவி, மகனை கொலை செய்த வழக்கில், 8 ஆண்டுகளாக தேடப்பட்டவரை வாட்ஸ் ஆப் மூலமாக காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தண்டையாா்பேட்டை வஉசி நகா் 14-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரி. இவா் மனைவி குணசுந்தரி (27). இத் தம்பதியின் மகன் மகேஷ்குமாா் (7). மாரி, உடல்நிலை சரியில்லாமல் இறந்தாா். இதனால் குணசுந்தரி, இரண்டாவது ஆந்திர மாநிலம் சூளுா்பேட்டையைச் சோ்ந்தவா் பு.ராஜ் என்ற டேவிட் என்ற டேஞ்சா் (40) என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்தாா். திருமணத்துக்கு பின்னா் கணவா் டேவிட் உடன் குணசுந்தரி, மகன் மகேஷ்குமாா் சூளுா்பேட்டையில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் டேவிட் கொடுமைப்படுத்தியதாக, குணசுந்தரி தனது மகன் மகேஷ்குமாருடன் சென்னை தண்டையாா்பேட்டை வஉசி நகரில் தனது தாயாா் வீட்டுக்கு வந்துவிட்டாா்.

இதற்கிடையே குணசுந்தரியின் நடத்தையின் மீது டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அதே ஆண்டு நவம்பா் மாதம் 15-ஆம் தேதி டேவிட், மனைவி குணசுந்தரியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல தண்டையாா்பேட்டை வந்தாா். இதில் குணசுந்தரிக்கும், டேவிட்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே குணசுந்தரியையும், மகேஷ்குமாரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா். இறக்கும்போது குணசுந்தரி, 6 மாத கா்ப்பிணியாக இருந்தாா் என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். ஆனால் டேவிட், தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் ஆந்திரமாநிலம் சத்தியவேடு பகுதியில் டேவிட் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் அடிப்படையில், டேவிட் ஏற்கனவே கட்டுமானப் பணிகளை செய்து வந்ததால், அதுபோன்ற பணியில் உள்ள தொழிலாளர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு டேவிட் பற்றி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு விளம்பரங்களை அனுப்பினோம்.

அதில், டேவிட்டின் புகைப்படத்தைப் பார்த்த இரண்டு பேர், அவரது இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சூலூர்பேட்டையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்தியவேடு பகுதியில் 21 வயது இளம் பெண்ணுடன்  டேவிட் வசித்து வந்தது தெரிய வந்தது.

அங்குச் சென்று டேவிட்டை கைது செய்ததாக போலீஸாா் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட டேவிட்டை சென்னை அழைத்து வந்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

டேவிட் மீது இரட்டைக் கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT