தமிழ்நாடு

சென்னை புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கனமழை

DIN


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் தற்போது காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த 2 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், கரூர் வேலூர், ராணிப்பேட்டை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT