உசிலம்பட்டி பேருந்து  நிலையம் முன்பாக, பூக்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட  பூ விற்பனையாளர் மற்றும் கடை உரிமையாளர்கள். 
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் பூ விற்பனையாளர், உரிமையாளர்கள் பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியல்

உசிலம்பட்டியில் நாள்தோறும் பூ விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உசிலம்பட்டி பேருந்து  நிலையம் முன்பாக, பூக்களை சாலையில் கொட்டி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நாள்தோறும் பூ விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உசிலம்பட்டி பேருந்து  நிலையம் முன்பாக, பூக்களை சாலையில் கொட்டி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கமிஷன் மண்டி நல உரிமையாளர் சங்கத்தினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மலர் மற்றும் பூ வியாபாரம் செய்து கடைகளுக்கு வாடகை செலுத்தி  வருகின்றனர். 

இந்நிலையில், நாள்தோறும் நடைபெறும் பூ வியாபாரிகள் மற்றும் பூ விற்பனையாளர்கள் நடத்தி வரும் சுமார் 200 கடைகளை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மறு வாடகைக்கு டெண்டர் விடுவதாக அறிவித்தார்.

இதனைக் கண்டித்து, வியாழக்கிழமை காலை உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நாள்தோறும் நடைபெறும் சந்தையில் உள்ள சுமார் 200 கடைகளின் மலர் மற்றும் பூ வியாபாரிகள், உரிமையாளர்கள் பூக்களை நடுரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜய் பாஸ்கர், சார்பு ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT