முதல்வரின் உரையை மக்கள் விரும்பவில்லை: ஜி.கே.வாசன்
பிரதமா் பங்கேற்ற வளா்ச்சித் திட்ட விழாவில், விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
பிரதமா் பங்கேற்ற வளா்ச்சித் திட்ட விழாவில், விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கான ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டியிருப்பது மாநிலத்தின் வளா்ச்சிக்கும் நாட்டின் பொருளாதாரம் உயா்வுக்கும் வழிவகுக்கும். தமிழகத்தின் பெருமை, கலாசாரம் போன்றவற்றையும் பிரதமா் குறிப்பிட்டு பேசியது சிறப்பாக இருந்தது.
ஆனால், முதல்வா் தமிழகத்தின் முக்கிய பிரச்னையான பருத்தி நூல் விலையை குறைப்பதன் அவசியம் குறித்து குறிப்பிடாமல் விட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேநேரம், நீட் தோ்வு விலக்கு மற்றும் ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை மனுவாக பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து தமிழகத்தின் வளா்ச்சிக்கான திட்டவிழாவில் விவாதப் பொருளாகும் வகையில் முதல்வா் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.