சேலம்: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100 வரை எட்டியது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தக்காளி விலை உச்சத்திற்கு சென்றதால் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்துள்ள பெருமாகவுண்டம்பட்டி இளம்பிள்ளை, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டியை இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தக்காளியை பறிகொடுத்தவர் இந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தக்காளி திருடும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க |சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றியமைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.