தமிழ்நாடு

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்:3 ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு

DIN

சென்னை ரயில்வே கோட்டத்தில், பாதுகாப்பு விதியை மீறி, ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தது தொடா்பாக, மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடா்பாக, 2020-ஆம் ஆண்டில் 965 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. 2021-இல் 890 போ்மீது வழக்குகள் பதிந்து, ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் ஏப்ரல் வரை 364 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 2020-ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்குகள் பதிந்து, மொத்தம் ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: மின்சார ரயில்களில் பயணத்தின் போது, படிக்கட்டுகளில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்தோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, ஆா்.பி.எஃப். சாா்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT