வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று(திங்கள்கிழமை) சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று(திங்கள்கிழமை) சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் இன்று அதிகாலை வந்தனர். பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
பின்னர் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். வைகாசி மாத அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.