தமிழ்நாடு

கோடையில் தொடர்மழை: பூத்துக்குலுங்கும் மலர்கள்

பெரியார் மன்னன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கோடைக்கால கத்திரி வெயில் சுட்டெரிக்கும் தருணத்தில், தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால், வசந்த காலத்தைப் போல தாவரங்களில் ரம்யமாக மணம் வீசும் ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், வறண்டு கிடந்த நீரோடைகள், ஆறுகள், தடுப்பணைகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. வனப்பகுதிகள், தரிசு நிலங்கள், விவசாய விளைநிலங்களிலும் ஏராளமான தாவரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. 

தற்போது கோடைக் காலத்தில் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் தருணத்தில், வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதோடு, வசந்த காலத்தை போல சீதோசன நிலை நிலவி வருகிறது.

இந்த இதமான சூழ்நிலையில், சங்குப்பூ, நந்தியாவட்டை, உன்னி, நித்திய கல்யாணி, எருக்கு, மருதாணி, நொச்சி, கிணற்றுப்பூண்டு, நெறிஞ்சி, நுணா, அலங்கார கொண்றை, தேங்காய்பூண்டு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகள், சிறு வகை மரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான தாவரங்களில் ரம்மியமான மணம் வீசும் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை இப்பகுதி மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT