தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம் 
தமிழ்நாடு

தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN

புது தில்லி: தமிழகத்தில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளம், மாஹே பகுதிகளில் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நவம்பர் 2ஆம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT