தமிழ்நாடு

சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்!

DIN

சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறி உள்ளது. சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் சென்னை மாநகராட்சி, 6 சுரங்கப்பாதைகளையும் நெடுஞ்சாலைத்துறை 10 சுரங்கப்பாதைகளையும் சீரமைத்து வருகிறது.

வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் கூட மழைநீர் தேங்காமல் வெளியேறி உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வேலூா், திருவள்ளூா் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT