அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் 
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழைக்கு 2 பேர் பலி: தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

வடகிழக்குப் பருவமழைக்கு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார். 

DIN

வடகிழக்குப் பருவமழைக்கு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரும் என இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். 

மேலும், வடகிழக்குப் பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. பருவமழையை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் வழக்கமான மழை பாதிப்புகள் உள்ளது. நீரை வெளியேறும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

எந்த இடங்களில் பிரச்னை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி அதைச் சரிசெய்யப்படும் என மேலும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT